ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..

கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா-&நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் முதல் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நியூசிலாந்து அரசு பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், நாடு திரும்பவும், 14 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாத இறுதியில் இரு அணிகளும் நியூசிலாந்தில் விளையாட உள்ள டி20 போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறாது. இந்த போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − 57 =