கை கூப்பி வணக்கம் மட்டுமே ; கை குலுக்கல் இல்லை : இந்திய பயணத்திற்குப்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அயர்லாந்து பிரதமர்  லியோ வரட்கருடன் கை குலுக்காமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  வணக்கம் தெரிவித்தார். 

அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்தது குறித்து  டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.  அதில் 

கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன்.  அண்மையில் தான் இந்தியாவில் இருந்து நான் திரும்பினேன். அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால். இந்தியாவில் இருந்து வந்ததில் இருந்து கை குலுக்காமல்  வணக்கம்  தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =