அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா: 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
சட்டசபையில் , 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்:
* தமிழகத்தில் உள்ள ,4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
* ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும்
* 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்படும்
* 30 அரசு உயர்நிலை பள்ளிகள் ரூ.55 கோடியில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
* 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும்
* திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்படும்
* ஆரணி நகராட்சியில் அமைந்துள்ள சூரிய குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதுகாப்பு வேலி ரூ.6 கோடியில் அமைக்கப்படும்
* நெருப்புக்கோழி, மலைப்பாம்பு ஆகிய விலங்குகள் கொண்டு நடுத்தர வன உயிரின பூங்கா ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்
* சேலம் குரும்பப்பட்டியில் சிறு வன உயிரின பூங்கா, நடுத்தர வன உயிரின பூங்காவாக தரம் உயர்த்த ரூ.8 கோடி ஒதுக்கீடு
* யானைகள் காடுகளில் இருந்து வெளியேறுவதை தடுக்க எக்கு கம்பியூடன் கூடிய சிமென்ட் கான்கீரீட் ரூ.27 கோடியில் அமைக்கப்படும்


* சென்னை வேளச்சேரியில் வனத்துறை அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கீடு
* வனங்களில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு காவல்படை உருவாக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − = 46