வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் : உள்ளே எதுவும் இல்லாததால் திருடப்பட்ட பைக்

அரியலூரில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு எதுவும் இல்லையென்பதால் வெளியே இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றனர்.

அரியலூர் மாவட்டம் புறவழிச் சாலையில் வசித்து வருபவர் கண்ணன். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளதால், அவரை பார்ப்பதற்கு நேற்று இரவு மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 5 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.

image

இதேபோல், அரியலூர் பாரதியார் நகரில் வசிக்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரத் என்பவரின் வீட்டிலும் கொள்ளையடிக்க முயற்சிகள் நடந்துள்ளன. வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கே எதுவும் இல்லை என்பதும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இருப்பினும் வீட்டிற்கு வெளியில் நின்ற இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். 

image

இதுதொடர்பாக கண்ணன் மற்றும் பரத் ஆகியோர் தனித்தனியே புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள கயர்லாபாத் போலீஸார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =