மொபைல்போன் சேவை நிறுவனங்கள் இன்னும் ரூ.1,30,440 கோடி நிலுவை

புதுடில்லி, : ‘மொபைல்’ போன் சேவை நிறுவனங்கள், தொலைதொடர்பு துறைக்கு, இன்னும், 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 440 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, லோக்சபாவில் மத்திய தொலைதொடர்பு துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே கூறியதாவது:

மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தொலைதொடர்பு துறைக்கு, 1 லட்சத்து, 46ஆயிரத்து, 337 கோடி ரூபாய் நிலுவையை செலுத்த, உச்ச நீதிமன்றம், 2019, அக்.,24ல், உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தொலை தொடர்பு துறைக்கு, நிலுவையை செலுத்தி வருகின்றன.
இதுவரை,15 ஆயிரத்து, 896 கோடி ரூபாய் செலுத்தியுள்ளன. இன்னும், 1 லட்சத்து, 30ஆயிரத்து, 440 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
பிப்.,29க்கு முந்தைய நிலவரப்படி, பார்தி ஏர்டெல், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தியுள்ளது; 27ஆயிரத்து, 740 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. வோடபோன் நிறுவனம், 3,500 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது; 49ஆயிரத்து, 538 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 3.96 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. இதன் நிலுவை, 21ஆயிரத்து, 135 கோடி ரூபாயாக உள்ளது. டாடா டெலிசர்வீசஸ், 2,197 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது; 11ஆயிரத்து, 625 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.பொது துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., 4,989 கோடி ரூபாய்; எம்.டி.என்.எல்., 3,122 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ, 195 கோடி ரூபாய் நிலுவையை செலுத்தியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 9 = 1