மார்ச் 9-இல் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“திமுக தலைவர் – சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 09-03-2020 திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மார்ச் 9-ஆம் தேதி முதல் 23 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் பி.தனபால் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 85