தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

2020-2021 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 17ஆம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 20ஆம் தேதி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அப்போது பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 − = 56