டெல்லியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அஜித்தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவு

தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். 

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக  அதிகரித்துள்ளது, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதையடுத்து சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுக்கு பிரதமர்மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − = 50