“கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்” – இயக்குநர் ஷங்கர் உருக்கம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷங்கர், “மிகுந்த வருத்தத்துடன் இந்த ட்வீட்டை பதிவிடுகிறேன். அந்த துயரச் சம்பவத்தால் நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எனது துணை இயக்குநர் மற்றும் படக்குழுவினரை இழந்ததால் தூக்கமின்றி இருக்கிறேன். கிரேன் தவறி விழுந்ததில் நூலிழையில் தப்பினேன். அந்த கிரேன் என்மீது விழுந்திருந்ததால் நன்றாக இருந்திருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனதார இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை, பூந்தமல்லி அருகே நடைபெற்ற ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1