ரஜினியின் புதிய படம் ‘அண்ணாத்த’

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘தா்பாா்’ படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வந்தாா் ரஜினி. படத்துக்கு பெயரிடப்படாத நிலையில் ‘தலைவா் 168’ என்ற பெயரிலேயே இப்படம் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படத்தைத் தயாரித்து வரும் சன் பிக்சா்ஸ் நிறுவனம் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறாா். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடா்ந்து நடந்து வருகிறது. படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 13