தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.

இதனையடுத்து காலியாகும் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை மார்ச் 6-ம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13-ம் தேதி. மனுக்களை திரும்ப பெற மார்ச் 18-ம் தேதி கடைசி நாள். மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின்னர் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 + = 28