டெல்லியில் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 150 போலீசார் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையினால் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. டெல்லி கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

61 − = 58