டிரம்ப் தங்கிய அறையின் வாடகை ரூ.8 லட்சமாம்

புதுடில்லி: இந்தியாவில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று மூக்கின் மேல் விரல் வைக்கக் கூடிய அளவுக்கு வசதிகள் கொண்ட அறையில், டிரம்ப் மற்றும் மெலனியா தங்கினர்.
டில்லியின் சர்தார் படேல் மார்க் பகுதியில் உள்ள, ஐ.டி.சி., மவுரா ஓட்டலில் உள்ள -‘த கிராண்ட் பிரசிடென்சியல் சூட்’ அல்லது ‘சாணக்கியா சூட்’ என்றழைக்கப்படும், 4,600 சதுர அடி கொண்ட அறையில், டிரம்ப் நேற்று (பிப்., 18) இரவில் தங்கினார். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கான வாடகை, 8 லட்சம் ரூபாய்.
ஓட்டலின் 14வது மாடியில் அமைந்துள்ள அறையில், பட்டால் ஆன பேனல்களால் அமைக்கப்பட்ட சுவர், மரத்தாலான தரை மற்றும் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு, அலங்காரம் ஆகியவை, பூலோக சொர்க்கமா என, வாயைப் பிளக்க வைக்கும். மிகப் பெரிய வரவேற்பறை, மயில்கள் அடிப்படையிலான, 12 பேர் அமரக் கூடிய தனி உணவருந்தும் பகுதி, ஜிம் உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன.

வெளியே காற்றின் மாசு எவ்வளவாக இருந்தாலும், மலைப் பிரதேசத்தில் இருப்பது போல், மிகவும் சுத்தமான காற்று இங்கும் நிலவும். டிரம்ப் மற்றும் குடும்பத்தாருக்கு விரும்பிய உணவை சமைக்க தனியாக சமையல் கலை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − 76 =