காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு பக்கமும் பேசிய டிரம்ப்

காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய டிரம்ப் இரு நாட்டு பிரதமருடனுமே எனக்கு ஒரு நல்ல நட்புறவு இருக்கிறது என கூறியிருப்பதால் மக்களிடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யவோ, பிரச்சனைக்கு தீர்வு காண உதவவோ அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் கூறினார்.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் கட்டவிழித்து விடப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து டிரம்ப் அளித்த பதிலில், இந்தியா &- பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை மிக நீண்ட காலமாக நெருடலான விஷயமாகவே உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்யவோ அல்லது உதவவோ தாயராக இருக்கிறேன். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானும் செயலாற்றி வருகிறது. நீண்ட காலமாக மக்களின் கவனத்தில் இருக்கும் பிரச்சனையாக காஷ்மீர் உள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இன்றைய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதம் குறித்து விரிவாகவேப் பேசியுள்ளோம்.

நிச்சயம் இது ஒரு பிரச்சனைதான். என்னால் என்ன செய்ய முடியுமோ செய்ய நான் தயார் என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், இரண்டு பேருடனுமே (பிரதமர் மோடி – பாக் பிரதமர் இம்ரான் கான்) எனக்கு ஒரு நல்ல நட்புறவு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த பேச்சின் போது பயங்கரவாதம் குறித்தோ, காஷ்மீர் விவகாரம் குறித்தோ டிரம்ப் ஒரு முறை கூட பாகிஸ்தானை விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + = 26