அமெரிக்க அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு – காந்தி நினைவிடத்தில் ட்ரம்ப் மரியாதை

ஜனாதிபதி  மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர்  டிரம்புக்கு  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர்.

டிரம்புக்கு  முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ராஜ்காட் சென்று  மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். டிரம்ப்பின் வருகைக்கு முன்னதாக  ராஜ்காட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டொனால்டு டிரம்புக்கு காந்தி சிலை பரிசளிக்கப்பட்டு உள்ளது. காந்தி நினைவிடத்தில்  மரக்கன்று ஒன்றையும் டிரம்ப் நட்டார்.டிரம்ப் மற்றும்  மெலனியா  ராஜ் காட்டில் காந்தி நினைவிடத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பு எழுதினார்கள்.தொடர்ந்து ஐதராபாத் மாளிகையின் முன் உள்ள புல்வெளிகளில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு  டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 2 =