மக்களுக்காகவே பாஜக அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறோம் : செல்லூர் ராஜுவின் பதிலால் புதிய சர்ச்சை

தமிழக மக்களின் நலனுக்காவே பாஜக அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள பதிலால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை ஜெயின் மேரிஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘மதரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த திமுக முயற்சித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையிலேயே சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தவறு என்று பாஜகவின் மூத்த தலைவர் முரளிதரராவ் கூறியிருந்தது குறித்து பதிலளித்த அவர், ‘அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

மக்களுக்காகவே மத்திய அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு இருந்தால் மட்டுமே தமிழகத்தில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர முடியும்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1