நடிகை த்ரிஷாவிற்கு தயாரிப்பாளர் டி.சிவா எச்சரிக்கை

சென்னைபடத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நடிகை த்ரிஷாவிற்கு தயாரிப்பாளர் டி.சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு த்ரிஷா வரவில்லை. அவரது இந்த செய்கைக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். அவர்களில் ஒருவரான அம்மா கிரியேக்ஷன்ஸ் அதிபர் டி.சிவா மேடையில் பேசும்போது கூறியதாவது:-

பெரிய கதாநாயகன் இல்லாமல், வெறுமனே விளம்பர நோக்கோடு இல்லாமல், நட்சத்திர அந்தஸ்துடன் இயக்குநர் திருஞானம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்துக்கு த்ரிஷா வரவில்லை என்பது உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படம் தொடர்பான ஒப்பந்த பத்திரத்திலேயே பட விழாக்களிலும், விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெளிவாகக் கூறிவிடுகிறார். அதனால் அவரைப் பற்றி நாம் பேசுவதற்கு இல்லை.

ஆனால் த்ரிஷா தொடர்ந்து இவ்வாறு அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், படத்திற்கு அவர் வாங்கும் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கோபமாகப் பேசினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =