இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் போல் திமுக நடித்து வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் போல் திமுக நடித்து வருகிறது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி பள்ளியின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டிய பின் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள்போல் திமுக நடித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் முறையான மற்றும் வெளிப்படைத் தன்மையாக விசாரணை நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததில் திமுக அரசியல் செய்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் தவறான கருத்தை திமுகவினர் பரப்புகின்றனர்.

இதற்கான விளைவை 2021 தேர்தலில் அவர்கள் சந்திப்பர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பில் பெரம்பலூர் போன்ற மாவட்டங்கள் அவை தொழில் வளம் நிறைந்த மாவட்டம் என்பதால் விடுபட்டுள்ளன.

நொச்சிக்குப்பம் மீனவர்கள் வாழ்வாதாரம் அந்தப் பகுதியைச் சார்ந்து இருப்பதால் மீன் விற்பனைக் கடைகள் சாலை இடையூறின்றி அதே இடத்தில் கடைகள் அமைத்து தரப்படும். தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் பள்ளிக் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக 7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. 7 பேர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது தமிழர்களின் உணர்வு. அதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடாகவும் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு மாநில அரசு நிர்பந்தம் கொடுக்க முடியாது. ஆனாலும், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 2