அமெரிக்க கோழிகளை இந்தியாவில் விற்பனை செய்ய இலக்கு – இந்திய சுற்று பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்ப்பார்ப்பு

நாளை இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 சதவீதம் அளவிற்கு அமெரிக்காவில் வளர்க்கப்படும் கோழிகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கோர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா அனுமதி வளங்கும் என்ற தகவல் பரவி உள்ளதால் நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை கோழிப் பண்ணையாளர்களும் மற்றும் கறிக் கோழிப் பண்ணையாளர்களும் அச்சத்தில் உள்ளனர். இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் கோழிப் பண்ணையாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்களின் வர்த்தக சங்கத்தின் செயலாளாரும் கால்நடை மருத்துவருமான செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் சிறியதும் பெரியதுமான ஆயிரத்திற்கும் அதிகமான முட்டையிடும் கோழிகள் பண்ணைகளில் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடி பெறப்பட்டு வருகிறது. இவைகளில் இருந்து கிடைக்கும் முட்டைகள் தமிழக அரசு பள்ளி சத்துணவு திட்டத்திற்கும், இந்திய தேவை போக மீதமுள்ள முட்டைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகளில் 9 கோடி கறிக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கறிக் கோழிகள் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உணவுக்காக அனுப்பப்படுகிறது. இத்தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிர கணக்கானோர் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசாமான அளவு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த முட்டை மற்றும் கறிக்கோழி பண்ணை தொழிலால் அரசுக்கும் வருவாய் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நாளை 24ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய சில வர்த்தகம் சம்மந்தமான பேச்சுவார்த்தைகளையும் பிரதமர் மோடியுடன் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதில் ஒன்று அமெரிக்க கோழிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறப்படுகிறது.

அமெரிக்க கோழி உற்பத்திகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் இறக்குமதி வரியைக் குறைக்கவும், 5 சதவீதம் வரை இறக்குமதி செய்ய அனுமதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல்வேறு நிலைகளை கடந்து இந்திய கோழிப்பண்ணைத் தொழிலை கடந்த 50 ஆண்டுகளாக சிறு மற்றும் குறு விவசாய பண்ணையாளர்களின் கடின உழைப்பால் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்படும் தொழிலாக தற்போது வளர்ந்துள்ளது.

கிராமப் புறங்களில் இத்தொழில் மூலம் சுமார் 3 கோடிப் பேர் வேலை வாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கோழிப்பண்ணை வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு கோடி கணக்கான ரூபாய் அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது. இந்தத் தொழில் மூலம் கிராமப்புறங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளன. அமெரிக்க கோழி உற்பத்தி வகைகளை இந்தியாவில் அனுமதித்தால் கோழி, முட்டை உற்பத்தி தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். மேலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகும்.

எனவே, அமெரிக்க கோழி உற்பத்திகனள விற்பனையை செய்ய இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்களின் வர்த்தக சங்கத்தின் செயலாளாரும் கால்நடை மருத்துவருமான செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 57 = 64