ராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம்

குவாலியர் : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற மாட்டோம் எனவும், பொது மக்கள் அளிக்கும் பங்களிப்பில் மட்டுமே இக்கோயில் கட்டப்படும் என ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாஸ் மகராஜ் தெரிவித்துள்ளார்.

கோபால் தாஸ் மகராஜ் தலைமையிலான ராமர் கோயில் அறக்கட்டளை பிரதிநிதிகள் டில்லியில் பிப்.,20 அன்று பிரதமரின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமரை சந்தித்து விட்டு குவாலியர் திரும்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கோபால் தாஸ் மகராஜ், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அழைப்பு விடுத்து விட்டோம். மத நம்பிக்கை உள்ள அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இந்த பிரம்மாண்ட விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படும். ம.பி., முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.


ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு தரும் நிதியை பெற போவதில்லை. பொது மக்களின் பங்களிப்பையும், அவர்கள் வழங்கும் நன்கொடையை கொண்டே இந்த கோயில் கட்டப்படும். அரசுக்கு ஏற்கனவே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளது.இதில் நாங்களும் கூடுதல் சுமையாக இருக்க முடியாது. அயோத்தி வர பிரதமரை சந்தித்து அழைப்பு விடுத்தோம். எங்களின் அழைப்பு குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரம்மாண்ட கோயிலை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4