வேம்படிதாளம் ஏரியில் அளவுக்கு மீறி மண் கொள்ளை பொதுமக்கள் புகார்.

வேம்படிதாளம் ஏரியில் அளவுக்கு மீறி மண்ணை எடுத்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார்.
இளம்பிள்ளை
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்பாளையம்(சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில்) பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளன. இந்த ஏரியில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக புரோக்கர் மூலம் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை வருவாய்த்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்து அதிகமாக மண்ணை வெட்டி எடுத்த இடத்தில் ஒரேமாதிரி சமப்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − 23 =