யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவராமல் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் என முதல்வர் பழனிசாமியிடம், திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

இன்று (பிப்.,20) நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

இன்றைய கூட்டத்தொடரில் இரு பிரச்னைகளை எழுப்பினேன். முதலாவதாக 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனால், உடனடியாக சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என குரல் எழுப்பினேன். அது குறித்து பேச அனுமதி வழங்கவில்லை, நான் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.

அடுத்ததாக, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை குறித்து கேட்டேன். தமிழகம் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் சிஏஏ.,வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பார்லி.,யில் ஆதரவாக ஓட்டளித்த அரசுகள் கூட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால், தமிழகத்தில் அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர்.

அதுசரி, இனி வரவிருக்கும் என்.பி.ஆர்., மட்டுமாவது தடுத்து நிறுத்துங்கள் என கூறினேன். உடனே முதல்வரும் வருவாய்த்துறை அமைச்சரும் பிரசாரத்தில் பேசுவது போல், பேசுகின்றனர். ஓட்டுவங்கிக்காக தான் இப்படி பேசுகிறீர்கள் என எங்களை பார்த்து சொல்கின்றனர். அப்படியானால், நீங்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்? எதற்காக தீர்மானம் கொண்டுவருவதில்லை?. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மசோதா நிறைவேற்றம்

இதற்கிடையே சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தபடி, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவசாயி என்ற முறையில் மசோதாவை தாக்கல் செய்வதை பெருமையாக கருதுகிறேன், எனக்கூறி பழனிசாமி தாக்கல் செய்தார். இதற்காக முதல்வர் தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும், அதில் வேளாண் பல்கலை துணைவேந்தரும் இருப்பார் எனவும் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1