தமிழகத்தை அதிர வைத்த தொடர் விபத்துகள் 20க்கும் மேற்பட்டோர் பலி

சென்னை: நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 3 விபத்துகள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன.

சென்னையில் நேற்று இரவு, கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் உதவி இயக்குனரும், பிரபல கார்டுனிஸ்ட் மதனின் மருமகனுமான கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் காயமடைந்தனர்.

இன்று (பிப்.,20) அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரள அரசு சொகுசு பஸ், கன்டெய்னர் லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து நடந்த சிறிது நேரத்தில் சேலம் ஓமலூரில் நேபாள பயணிகள் வந்த பஸ்சும், வேனும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.


குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கன்டெய்னர் லாரி டிரைவர் கண் அயர்ந்ததே அவிநாசி கோர விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. அதிகாலையில் இது போன்ற கோர விபத்துக்கள் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. டிரைவர்கள் போதிய ஓய்வின்றி தொடர்ந்து பணியில் ஈடுபடுவதே இது போன்ற விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =