“தண்ணீர் வேண்டும்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஹரியானா கிராம மக்கள் கோரிக்கை

ஹரியானாவில் உள்ள ஒரு கிராம மக்கள் தண்ணீர் வசதி கேட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த கிராமத்துக்கும் ட்ரம்புக்கும் ஏற்கனவே ஒரு பந்தம் இருப்பதால் உரிமையுடன் கேட்டிருக்கிறார்கள். அந்த பந்தம் என்ன? எப்படி ஏற்பட்டது? வாஷிங்டனின் சமூக சேவை நிறுவனமான சுலப் இன்டர்நேஷனல் சார்பில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட போது அதை இந்த மரோரா கிராமமே பெற்றது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் ட்ரம்ப்பும் முதல்முறையாக சந்தித்த போது இந்த சிறப்பை மரோரா பெற்றதால் அதன் நினைவாக, ‘ட்ரம்ப்’ கிராமம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

image

அன்றிலிருந்து ட்ரம்ப் கிராமம் என்றே கவுரவமாக அழைக்கப்பட்டது. விதவைகளுக்கும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல வண்ணங்களில் கழிவறைகள் ஜொலித்தன, என்றாலும் நாளடைவில் அவை பயனற்றவையாகவே காணப்பட்டன. இந்நிலையில் தங்கள் கிராமம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும், தினசரி தேவைக்காக தண்ணீர் லாரிகளை நம்பியே வாழ்வதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − = 26