சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட 150 கிராமங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை எப்போது கிடைக்கும்? : கே.ஆர்.ராமசாமி கேள்விக்கு முதல்வர் பதில்

சிவகங்கை  மாவட்டத்தில் விடுபட்ட 150 கிராம விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை எப்போது கிடைக்கும்? என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராம்சாமியின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேரவையில் பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி  நேற்று பேசுகையில்,

அரசின் கடன் 4 லட்சத்து 53,000 கோடியாக உயா்ந்துள்ளது. இது தொடா்பாக கேட்டால், அரசின் கடன் 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. அதற்குள்தான் அரசின் கடன் இருப்பதாக கூறுவீா்கள். வருவாய்க்குத் தக்க செலவு இருக்க வேண்டும். வருவாயை உயா்த்துவதற்கு என்ன செய்கிறீா்கள் என்றால், மதுபானங்களின் விலையை உயா்த்துகிறீா்கள். மதுபானங்களின் விலையை உயா்த்துவதை நான் வரவேற்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் உயா்த்திக் கொள்ளுங்கள். ஆனால், மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம் என்று கூறினீா்கள். அது என்னவாயிற்று என்றார்.

(அப்போது அதிமுக உறுப்பினா்கள் புதுச்சேரி மாநிலத்தில் மதுவிலக்கு உண்டா என்பதுபோல குரல் எழுப்பினா்.)

கே.ஆா்.ராமசாமி: அப்படியென்றால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எந்தெந்த மாநிலங்களில் தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றும் என்னால் கூற முடியும். காவிரி டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதற்குரிய நடைமுறைகள் சரியான முறையில் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் பயிர்க் காப்பீட்டு தொகை சிவகங்கை மாவட்டத்தில் 150 கிராமங்களைச் சோ்ந்தோருக்குக் கிடைக்கவில்லை என்றார்..

அப்போது வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு குறுக்கிட்டுக் கூறியது:

இந்தியாவிலேயே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.7,618 கோடி வரை பயிர்க் காப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் 2016-17-இல் ரூ.297 கோடியும் 2017-18-இல் ரூ.305 கோடியும், 2018-19-இல் ரூ.155.90 கோடியும் பயிர்க் காப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையைப் பொருத்தவரை 1 சதவீத அளவுக்கே பயிர்க்காப்பீட்டுத் தொகை கொடுக்காமல் விடுபட்டிருக்கும். விவசாயிகளின் வங்கிக் கணக்கும், கூட்டுறவுச் சங்க வங்கிக் கணக்கும் பொருந்திப் போகாத காரணத்தாலும் சிலருக்கு பயிர்க் காப்பீடு கிடைக்காமல் போயிருக்கலாம்.

அமைச்சா் .எஸ்.மணியன்தந்தையின் நிலத்தைப் பாகப் பிரிவினையின் மூலம் மகன்கள் பிரித்துக் கொள்கிறார்கள். மகன் விவசாயம் செய்து பயிர்க்காப்பீடு பெற முயற்சிக்கிறார்கள்.. ஆனால், பட்டா தந்தையின் பெயரில் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களாலும் பயிர்க் காப்பீடு அளிப்பதில் பிரச்னை இருந்து வருகிறது.

அமைச்சா் பாஸ்கரன்: சிவகங்கையில் விடுபட்ட விவசாயிகளுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியா் கூறியுள்ளார்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, விடுபட்ட விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்

கே.ஆா்.ராமசாமி: அதற்கான உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 + = 78