கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் போட்டி

கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு. வெற்றி பெற்ற எருதுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல் கரடிகுறி  கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெற்றிவேல் முருகன் ஆலய திருப்பணியை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாபெரும் எருது விடும் போட்டி நடைபெற்றது.

இந்த எருது விடும் போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துக்கொண்டன.

போட்டியில்  கலந்துக்கொண்ட காளைகளுக்கு, கால்நடை மருத்துவர்கள் மூலமாக தீவிர மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு, போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பின்னர் கிராமத்தின் மையப்பகுதியில் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைத்து, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் பிடிக்க முயன்றனர்.

குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்த  காளைகளின் உரிமையாளருக்கு தங்க நாணயம், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த எருது விடும் விழாவின் போது எந்த ஒரு அசம்பாவிதங்களையும் தவிற்க ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்படுகளை  மேல் கரடிகுறி உள்ளிட்ட ஏழு ஊர் கவுண்டரான காளைமுத்து, கண்ணன் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2