நடிகர் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 6 பேர் பலி

சென்னை:பூந்தமல்லி அருகே நடந்த சினிமா படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 6பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர்.


பூந்தமல்லி அருகே நசரேத்பேட்டையில் இ.வி.பி. தீம் பார்க்கில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. படப்பிடிப்பிற்கான செட்டிங்சை கிரேன் உதவியுடன் அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது.

கிரேன் அறுந்து விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்

இச்சம்பவத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் 6 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். கமலஹாசன் சம்பவ இடத்தில் மருத்துவ உதவி செய்து வருகிறார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − 48 =