தொடங்கியது மாநாடு ஷூட்டிங்: சிம்புவை நேரில் வாழ்த்திய சீமான்!

‘மாநாடு’ படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இதில் இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா என மூன்று பெரிய இயக்குநர்களும் நடிக்க உள்ளனர்.

சில சிக்கல்களால் ‘மாநாடு’ திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு, அதன்பின் சில சமரச முயற்சிகள் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிம்பு ஆகிய இருவருக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டது.

image

இதனையடுத்து கடந்த வாரம் ‘மாநாடு’ படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த விவரங்களை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

image

இந்த முதற்கட்ட படப்பிடிப்பு குறைந்தபட்சம் இரு மாதங்கள் நடைபெற உள்ளது. ஆகவே படத்தின் 90% வேலைகள் இந்தக் காலகட்டத்திற்குள்ளாகவே முடிவடைந்துவிடும் என்றும் கூறப்பட்டது. அதன்படி மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் சிக்கித் தவித்த இந்தப் படம் ஒருவழியாக தொடங்கி உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

image

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிம்புவை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு எனக் கூறப்படுகிறது. மேலும் மாநாடு படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும், சிம்புவை சீமான் சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 9