தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவ இதழ் துவக்கவிழா

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவ இதழ்  துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நவீன உலகில எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் புதிய தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியம். மக்களை காக்கும் மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் புதிய தொற்று நோய்கள் மற்றும் புதிய நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக தஞ்சாவூர் மீனாட்சி மெடிக்கல் மாத இதழ் எனப்படும் மருத்துவர்களுக்கான மாத இதழ் வெளியிடப்பட்டது. இந்த மாத இதழில் தலைசிறந்த மருத்துவர்களின் மருத்துவ கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.

இவ்விழாவில் மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். புற்றுநோய் கதிரியக்க சிறப்பு மருத்துவர் சசிகுமார் மருத்துவ இதழ் குறித்த விளக்க உரை ஆற்றினார். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தனியார் மருத்துவமனைகளின் வாரிய மாநில தலைவர் ஸ்ரீதர் மருத்துவ இதழின் முதல் பிரதியை வெளியிட்டார்,அகில இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த தலைவர் டாக்டர் வரதராஜன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி முதல்வர் அம்புஜம், இளங்கோவன் மற்றும் மீனாட்சி மருத்துவமனையின் தலைமை நிர்வாகி பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மீனாட்சி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் பிரவீன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − = 32