கோவிட்-19 வீழ்த்த பாரம்பரிய மருத்துவத்தை நாட சீனா முடிவு

பீஜிங்: சீனாவில் ‘கோவிட்-19’ வைரஸ் என்றழைக்கப்படும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பாரம்பரிய மருந்து வழங்கி வருவதாக சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் உருவான ‘கோவிட்-19’ வைரசால் இதுவரை, 1,600 பேர் உயிரிழந்துள்ளனர்; 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அதை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ‘கோவிட்-19’ வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

‘கோவிட்-19’ஆல் பாதிக்கப்பட்டுள்ள பாதிக்கும் அதிகமான நோயாளிகளுக்கு, பாரம்பரிய சீன மருந்துகள் கொடுக்கப்பட்டு வருதாக, ஹூபே மாகாண சுகாதார அமைப்பின் தலைவர் வாங் ஹெஷெங் கூறியுள்ளார். வாங் ஹெஷெங் தெரிவித்துள்ளதாவது:
சீனர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய மருந்துகள், 3,000 ஆண்டுகள் பழமையானது. அந்த மருந்தின் மீது, அரசுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையுள்ளது. தற்போது, பாரம்பரிய சீன மருத்துவர்கள், 2,200 பேர் ஹூபே மாகாணத்திற்கு வந்துள்ளனர். அவர்கள், வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50 சதவீதம் பேருக்கு, பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘கடந்த 2015ம் ஆண்டில், தமிழக மக்களை நிலைகுலையச் செய்த, ‘டெங்கு’ காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ‘டெங்கு’வைக் கட்டுப்படுத்த, தமிழக பாரம்பரிய மருத்துவர்கள் பரிந்துரைத்த பப்பாளி இலைச் சாறும், நிலவேம்புக் கசாயமும் தான் கைகொடுத்தது. இன்று வரை டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் தென்படும் போதெல்லாம், நிலவேம்பு கஷாயத்தை குடிக்குமாறு, தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. இதனால், சீனர்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது’ என, தமிழகப் பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 + = 54