புதுக்கோட்டை அருகே ரயில்வே கேட்டில் மோதிய ஆட்டோ : நடுவழியில் ரயிகள் நிறுத்தம் – சாலைப் போக்குவரத்தும் பாதிப்பு

புதுக்கோட்டை: மாவட்டம் கீரனுார் அருகே ரயில்வே கேட்போடும்போது உள்ளே புகுந்து மோதிய ஆட்டோவினால் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன, இதனால் ஒருமணி நேரத்திற்குமேல் சாலைப் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகின.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் -குன்னடார்கோயில் சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது, இது கீரனுார் ரயில்நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளன, நேற்று மாலை 6, 30 மணிக்கு காரைக்குடியில் இருந்து ரயில் என்ஜின் செல்வதற்காக கேட் கீப்பர் ரயில்வே கேட்டை கீழே இறக்கி கொண்டிருந்தனர், அப்போது அரியமங்கலத்தில் இருந்து கீரனுார் அருகே உள்ள ஓடுகம்பட்டி தர்காவிற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேட் ஆட்டோவை நிவாஸ்பாபு என்பவர் ஓட்டி வந்தார், முதல் கேட்டை தாண்டிய ஷேர் ஆட்டோ தண்டவாளத்தை கடந்து சென்று 2 வது கேட்டின் மீது மோதியதாக கூறப்படுகிறது, இதனால் இரும்பு கேட் சேதமடைந்து சிக்னல் விழவில்லை.

இதனால் அந்த வழியாக வந்த ரயில்என்ஜின் ஒரு கிலோ மீட்டர் முன்பு நிறுத்தப்பட்டது, தகவலறிந்த கீரனுார் ரயி்ல்வே ஸ்டேசனில் இருந்து ஊழியர்கள் மற்றும்போலீசார் விரைந்து வந்தனர், உடைந்த பகுதி கேட்டை திறக்க முடியவில்லை, இதனால் கீரனுார்-குன்னடார்கோயில் சாலை போக்குவரத்து கடும்பாதிப்புக்குள்ளானது, இதனிடையே காரைக்குடி-திருச்சி பாசஞ்சர் ரயில் கீரனுார் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன, ஏறத்தாழ ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் ரயில்வே போக்குவரத்து தொடங்கியது, மோதிய ஷேர் ஆட்டோ கீரனுார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன, இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 58 = 64