நிகழ் பதிவு: தமிழக பட்ஜெட் 2020; சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை – ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல் வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை: ஓபிஎஸ்

சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும் என்றும் அவர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி: ஓபிஎஸ்

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடியாக உள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: ஓபிஎஸ்

சிசிடிவியின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில்  அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

5 முக்கியத் துறைகளின் நிதி ஒதுக்கீடு விவரம்

* உயர் கல்வித்துறை – 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சுகாதாரத்துறை – 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தொழிலாளர் நலத்துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

* தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு. 

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க தமிழக அரசு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்: ஓபிஎஸ்

2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். 

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். 

நகராட்சி நிர்வாகத்துக்கு மொத்தமாக ரூ.18,540 கோடி ஒதுக்கீடு

* நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு – 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நிதிநிலை அறிக்கையை அவர் வாசித்து வருகிறார். 

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 9-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஓபிஎஸ் உரையாற்றி வருகிறார். 

பட்ஜெட் தாள்கள் அடங்கிய பையில் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை நடைபெறும் தலைமைச் செயலகத்துக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வருகை புரிந்தார். 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி நடைபெறும் கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறி விப்பு, குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை குறித்த விவகாரங்கள் பேரவையில் எழுப்பப்படும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 − 73 =