தமிழக பட்ஜெட் :2020-21 முக்கிய அம்சங்கள் – மக்களை கவரும் புதிய திட்டங்கள் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். இன்று காலை தாக்கல் செய்தார் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அவர் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 2021ல் நடக்கும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் நிறைய அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது. 

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு

அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு 

உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு

காவிரி – குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

\அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் கிராமர் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது

 குடிநீர் வழங்கல் ,சுகாதாரம் கல்வி ,உணவு ,பாதுகாப்பு, அணுகு சாலை கட்டமைப்பு, இடுகாடுகள் ,தெருவிளக்குகள் ,வீட்டுவசதி ,வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ,பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, உலகதரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகம் 12.21 கோடியில் அமைக்கப்படும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 6,754 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலை துறையில் சாலைப் பாதுகாப்பிற்காக தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் .

2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுத்திக்குள் வழங்கப்படும் என நம்புகிறோம்.

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிப் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது .

கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்

ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித்தர இந்த அரசு முயற்சி செய்யும். தற்போது புதியதாக வகுக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.

ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு. முதியோர் நலனுக்கான பல முன்முயற்சிகளை அரசு தொடங்கும். இதன் முன்னோட்ட திட்டமாக 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் 37 லட்சம் ரூ செலவில் முதியோர் ஆதரவு மையங்களை அரசு தொடங்கும்.

கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம்  – 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை.

7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அமைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2லட்சம் வரை இழப்பீடு; விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =