காவிரி – குண்டாறு- வைகை- இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டப்பணியாக நிதி ஒதுக்கீடு புதுக்கோட்டையில் கொண்டாட்டம்

காவிரி – குண்டாறு- வைகை- இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணியாக வெள்ளாறு வரை இணைப்புக் கால்வாய் வெட்டப்பட உள்ளது. இணைப்புக் கால்வாய்க்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.700 கோடியை தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்தார் அதனை வரவேற்று கொண்டாடும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டதற்கு
தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சந்தைபேட்டையில் அ.தி.முக திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் M.ராஜேந்திரன் அ.தி.மு.க. ஆலங்குடி நகர செயலாளர் KVS. பழனிவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.அதைபோல் புதுக்கோட்டை,கீரமங்களம்,கொத்தமங்களம்,அறந்தாங்கி,விராலிமலை,அன்னவாசல்,இலுப்பூர்,கந்தர்வக்கோட்டை,பொன்னமராவதி உள்ளிட்ட அனைத்துபகுதிகளிலும் அதை ஒண்டாடும் வகையில் அதிமுகவினர் மற்றும் விவசாயசங்க நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.புதுக்கோட்டை நகரில் நகரசெயலாளர் பாஸ்கர் தலைமையிலான அதிமுகவினரும் அதை போல் மாவட்டத்தில் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் அந்தந்த ஒன்றியசெயலாளர்கள் தலைமையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகள் கனவான இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக நடப்பு கூட்ட தொடரில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என புதுக்கோட்டையில் நேற்று முந்தினம் நடந்த விவசாயசங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பாராட்டுவிழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த நிலையில் இன்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 62 = 67