காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு! : புதுக்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி !

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூறாண்டு காலக் கனவான காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு  பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. இந்த மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் போதிய மழை இல்லாததால் நிரம்புவதில்லை. அதேவேளை இந்த மாவட்டத்தில் உள்ள காவிரி- குண்டாறு நதிகளை இணைத்தால் ,விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அனைத்து விவசாயமும் செழித்து வளரும் என்பதில் மாற்றமில்லை.

இந்தக் கோரிக்கையை விவசாயிகள் பன்னெடுங்காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அது கிடப்பிலேயே போடப்பட்டது. அந்த கோரிக்கைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தின் விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்கங்க அமைப்புளும் முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திதுப் பேசினர். அவர்களும் இந்தக் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர். அதற்கான நன்றி அறிவிப்புக்கூட்டம் விவசாய சங்கங்களின் ஏற்பாட்டில் சில தினங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

அந்தக் கூட்ட்த்தில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நடப்பு  பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்ப்டும்  என அறிவித்தார். அதன்படியே தமிழக சட்டப்பேரவையில் இன்று  தாக்கல்  செய்த பட்ஜெட்டில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு  நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.700 கோடியை ஒதுக்கீடு செய்வதாக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்ச் செல்வம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்கள் மாவட்டத்தின் நூற்றண்டு கால கனவுத் திட்டம் நனவாகி இருப்பதாகவும் , இதனை நிறைவேற்றிய அதிமுக அரசுக்கும் தமிழக முதல்வர்,துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அதன்படி, இன்று (பிப்.14) நடைபெற்ற தமிழக பட்ஜெட்டில் காவிரி – குண்டாறு திட்டத்துக்கு முதல் கட்ட நிதியாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர், துணை முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.

மேலும், இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்று புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியைப் பரிமாறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 58 = 66