புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது – நகர் முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரம்

நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நாளை (14.02.2020) புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் எழுச்சியுடன் தொடங்குகிறது.

புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்திலிருந்து புறப்பட்ட பிரச்சாரப் பயணத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். பிரச்சாரப் பயணத்தை புதுக்கோட்டை நகர்மன்ற மேலாளர் கிருஷ்ணவேணி தொடங்கி வைத்தார். பிரச்சாரப் பயணத்தில் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநிலவன், அ.மணவாளன், எல்.பிரபாகரன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், கே.சதாசிவம், மு.முத்துக்குமார், எம்.வீரமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புத்தகத் திருவிழா சீருடை அணிந்து, தலைக்கவசத்துடன் நடைபெற்ற இந்தப் பேரணி பிருந்தாவனம், அண்ணாசிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திலகர்திடல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

மேலும், புத்தகத் திருவிழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நாளை முதல் 23-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் லட்சக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைத்துள்ளன. தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கு விரிவான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வருவேராருக்கு குடிநீர், கழிப்பிட, சிற்றுண்டி உணவகம், ஓய்வு எடுப்பதற்கு என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

தொடக்க விழாவிற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகிக்கிறார். முதல் விற்பனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். ‘கீழடி’ அரங்கத்தை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி, குழந்தைகளுக்கான கோளரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார் தொடங்கி வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

94 − = 84