தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்?: ராமதாசு சொல்லும் புதுவிளக்கம்


தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்? என்பது பற்றி  பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாசு புது விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-:அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வு முறைகேடு குறித்த விசாரணை, சரியான திசையில் செல்கிறது. இனிவரும் காலங்களில், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை சரியான திசையில் செல்வதால், அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருக்காது.டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது, தேர்தலுக்கான மாற்றம். அறிவு பஞ்சம் இருப்பதன் காரணமாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை, பணம் கொடுத்து, தி.மு.க., வாங்கிஇருக்கிறது. அறிவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு வறட்சியை சரி செய்து, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, பிரசாந்த் கிஷோர் அழைக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் இணையும்போது, நாங்கள், 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு உள்பட, ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது வரை, அ.தி.மு.க., கூட்டணி யில் தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலிலும், இதே கூட்டணியில் நீடிப்போம். வரும் காலங்களிலும், அ.தி.மு.க., கூட்டணியில் தொடருவோம். ரஜினி கட்சி பற்றிய பேச்சுக்கு இடமில்லை.இவ்வாறு, ராமதாசு கூறினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − 46 =