இந்தியாவின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக செய்தி வெளியாகியுள்ளது

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் முக்கிய தகவல்களை, அமெரிக்கா, பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருவதாக, அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ‘கிரிப்டோ ஏ.ஜி.,’ என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனத்துடன், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. தங்கள் நாட்டைச் சேர்ந்த உளவாளிகள், ராணுவ வீரர்கள், துாதர்கள் உள்ளிட்டோர் குறித்த ரகசியங்களை பாதுகாக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த, 1951ல், இந்த சுவிட்சர்லாந்து நிறுவனம், அமெரிக்காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., உடன் ஒப்பந்தம் செய்தது. பின், 1970ல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், இது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகளின் தகவல்களும், அமெரிக்காவுக்கு கிடைத்து வந்துள்ளது. இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 + = 81