47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : சிங்கப்பூரில் ஆரஞ்சு அலர்ட்

உலகத்தையே அச்சுறுத்திக் கோண்டிருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பால், சிங்கப்பூர் அரசு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர்: சீனாவுக்குச் சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என, 47 பேருக்கு சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.


சீனாவுக்கு வெளியே இந்த வைரசால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூரில் தான். இதையடுத்து சிங்கப்பூர் அரசு முதலில், மஞ்சள் ‘அலர்ட்’ அறிவித்தது. சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகளுக்கும், இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது, தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர், ‘ஸ்வைன் ப்ளூ வைரஸ்’ பாதிப்பு இருந்தபோது, இத்தகைய நடவடிக்கையில் சிங்கப்பூர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − 56 =