கறம்பக்குடி அருகே மத நல்லிணக்க சம்பவம் : இந்து கோவிலுக்கு ஒரு ஏக்கர் நிலம் முஸ்லிம் பிரமுகர் இலவசம் பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள குழந்திரான்பட்டு கூத்தாளம்மன் கோவிலுக்கு, ஒரு ஏக்கர் நிலத்தை, கறம்பக்குடி ஜமாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் கலிபுல்லா  இலவசமாக வழங்கினார். அவருடைய இந்த மத நல்லிணக்கச் செயலுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குழந்திரான்பட்டு கிராமத்தில் இந்துக்கள் வணங்கிவரும் கூத்தாளம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு  திருவிழா வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அப்போது இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். பக்தர்களின் வசதிக்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்  அதற்குத் தேவையான ஒரு ஏக்கர் நிலத்தை , முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த கலிபுல்லா  இலவசமாக கொடுத்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜமாத் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார்,

இந்த ஒரு ஏக்கர் நிலத்திற்கான பத்திரப்பதிவு, கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில்  நடைபெற்றது. பத்திரப் பதிவின்போது குழந்திரான்பட்டு கிராமத்தார்கள், இந்து, முஸ்லிம் சமூகப் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமேனிநாதன், பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ரவி பல்லவராயர், கலிபுல்லாவின் சகோதரர் முகமது அலி மற்றும்  ஏராளமான பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தனது ஒரு ஏக்கர் சொந்த நிலத்தை இந்து கோயிலுக்கு கலிபுல்லா இலவசமாக வழங்கிய-தற்கு  ஏராளமான பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகின்றன.  இந்த நிகழ்வு இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 76 = 83