அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை பிப்ரவரி 16 இல் பதவியேற்பு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை டெல்லியில் 3 ஆவது முறையாக வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி பதவியேற்கிறது.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராம் லீலா மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக 8  இடங்களில் வென்றது. பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 − = 45