புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதல்: 15 குழந்தைகள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சீனமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தின் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில்  15 குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.  

சீனமங்களத்தில் இயங்கி வருகிறது தனியார்  ஆங்கிலத் தொடக்கப்  பள்ளி. ,இப்பள்ளி வாகனம் இன்று மாலை 4 மணி அளவில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது அநத   வாகனத்தின் மீது கட்டுமாவடி நோக்கி சென்ற லாரி திடீர் என்று  மோதியது.  இதில் 15 குழந்தைகள் உட்பட சீனமங்கலம் பகுதியைச் சேர்ந்த  முதியவர் ஒருவரும் காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காமடைந்தவர்களில் குணாளன்(9), மகேஸ்வரன்(10) ஆகிய இரு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில்  கருப்பையா(65) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  

இந்த விபத்து குறித்து அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வாகனத்தின் மீது மோதிய லாரி ஓட்டுநர் ஆனந்த் கைது செய்யப்பட்டு நாகுடி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − 37 =