தில்லி துணை முதல்வர் வெற்றி

புதுதில்லி: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெற்றி பெற்றுள்ளார். 

தில்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வெற்றி பெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவில் இருந்து வந்த மணீஷ் சிசோடியா இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் ரவீந்திர சிங் நேகியை விட 3000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுளளார். இதனைத்தொடர்ந்து தில்லியில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

வெற்றி குறித்து மணீஷ் சிசோடியா கூறியதாவது:  பட்பர்கஞ்ச் தொகுதியில் இருந்து மீண்டும் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜக வெறுப்பு அரசியலை செய்ய முயன்றது, ஆனால் தில்லி மக்கள் மக்களுக்கு வேலை செய்யும் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =