டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை

டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு. இன்று காலை   8 மணி முதல் வாக்குகள் எண்ணபப்ட்டு வருகின்றன.

தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரு தரப்பிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என அக்கட்சியினரும் கூறி வந்தனர்.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  இவற்றில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது.

டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி காலை 10 மணி நிலவரப்படி 51 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.  பா.ஜ.க. 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.  இதனால் ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடத் துவங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =