சாலையின் இருபுறமும் பள்ளம் – சரி செய்ய மக்கள் கோரிக்கை

இளம்பிள்ளை
கல்பாரப்பட்டியில் சாலையின் இருபுறமும் குட்டை இருப்பதால் எந்நேரத்திலும் விபத்து நடக்க வாய்ப்பு,இதனை மூட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் கல்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து வேம்படிதாளம் செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள பாறைைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக விிரோதிகளால் கற்கள் உடைத்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது அதை மூடாமல் அப்படியே கிடப்பில் விட்டதால் இருபுறமும் 50 அடி ஆழத்திற்கு மேல் அபாய குட்டை இருப்பதால் வழியாகச் செல்லும் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் இதனால் எந்நேரத்திலும் விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. இவ்விடத்தில் பெரிய விபத்து மற்றும் உயிர் இழப்பு எதுவும் நடக்கும் முன்பு தடுப்பு சுவரே அல்லது குழியை மூட வேண்டும் என வாகன அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்எழில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 53 = 61