டெல்லியை வெல்லப் போவது யார்? நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியைய் கைப்பற்றப் போவது யார்? என்பது  நாளை (பிப்ரவரி-11) நண்பகலுக்குள்  தெரிந்துவிடும்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி  8 ஆம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . அத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு நடக்க உள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல்  பிப்ரவரி 8 ஆம் தேதி  நடத்தப்பட்டது.

டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது.  வாக்குகள் 22 வாக்கு எண்ணும் மையங்களில் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி நிலவரங்கள் நாளை மதியத்திற்குள் தெரிய வரும்.  

கருத்துக்கணிப்புகள் எல்லாம் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிதான் வெல்லும் என்று கணிப்புகளை வெளியிட்டு சொல்லியிருக்கின்றன. ஆனால் மக்கள் எதை கணித்திருககிறார்கள் என்பது  நாளை  நண்பகலுக்குள் தெரிய வரும். இந்த தேர்தல் முடிவு என்பது வெறும் டெல்லி மக்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல..மொத்த இந்தியாவுக்கு முக்கியமானது. ஏனெனில் டெல்லி வெறும் நகரமல்ல. மொத்த இந்தியாவும் அங்கே வசிக்கிறது. டெல்லி ஒரு குட்டி இந்தியா. என்று அரசியல் விமர்சர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, பிரதமர் மோடியின் பாஜக, சோனியா காந்தியின் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி நிலவுகிறது.  இதில் வெற்றி பெறப் போவது யார் என்பது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

__________________________________


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 86 = 94