எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத் திருத்தம் செல்லும்: உச்சநீதிமன்றம்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இயற்றப்பட்ட எஸ்சி எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. குறிப்பாக வழக்குப்பதிவு செய்யும் முன் புகார் குறித்து விசாரணை நடத்தவேண்டும், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உயரதிகாரியின் அனுமதியை பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு, முன் ஜாமீன் அளிக்கக்கூடாது, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக விசாரணை நடத்த தேவையில்லை போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்தச் சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதுதான் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1