அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளியாகிறது.

இந்திய மக்களின் கதாநாயகனாய் போற்றபப்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இப்படத்திற்கு ’ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: தி மிசைல் மேன் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.  ஹாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் கூட்டு முயற்சியில் இந்த படம் உருவாகிறது.  2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த திரைப் படம், வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின், முதல் போஸ்டரை, டில்லியில் நடந்த விழாவில் வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தில், பிரபல தென்னக நடிகர் அலி, அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கிறார். படத்தை, ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் சார்பில், ஜானி மார்டின் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 5