ரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா ? : கே.எஸ்.அழகிரி

நடிகர் விஜய்க்கு பாஜக இலக்கு வைத்துள்ளது என்றும் ரஜினி போல் இவரும் கீழே விழுவாரா என்பது ஒருவாரத்தில் தெரியும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கூறியதாவது:

கடைசியாக பாஜகவுக்கு கிடைத்திருக்கும் இலக்கு விஜய். ஏன்னா அவங்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்திருக்கு, அதாவது ரஜினிகிட்ட இருக்கற ரசிகர்களுக்கெல்லாம் வயதாகி விட்டது, காவல்துறை சொல்லியிருக்கும் விஜய்கிட்டத்தான் சின்னப்பசங்க நிறைய இருக்காங்க எனவே விஜய்யைப் பிடிங்கன்னு சொல்லியிருப்பாங்க.

இப்ப என்ன ஆயிட்டிருக்கும்னா விஜய்க்காக ஒரு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படி ரஜினி அறிக்கை விட்டாரோ அதே மாதிரி விஜய்க்கு அறிக்கை விடுவதற்காக ஒரு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். அது விஜய்யோட தைரியத்தைப் பொறுத்தது, அவரும் ரஜினி மாதிரி கீழே விழுந்தடறாரா அல்லது நிமிர்ந்து நிக்ற்கிறாரா என்பதை இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் நாம் பார்க்கலாம்.

விஜய் உறுதியாக நிற்பார் என்று நாங்கள் கருதுகின்றோம். அப்படி அவர் நிற்பதற்கு நாங்கள் எல்லாம் துணையாக நிற்போம், இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவரும் அவருக்குத் துணையாக இருப்போம் என்பதனை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 37 = 46