புதுக்கோட்டை – பொற்பனைக்கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூசம் 10ம் ஆண்டு சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை அருகில்  அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்    திருக்கோவிலில் தைப்பூசம் 10ம் ஆண்டு  சிறப்பு வழிபாடு மண்டகப்படிவிழா   ருத்திராஷ மாலை அலங்காரம் சிறப்புடன் நடைபெற்றது.

இன்று காலையில்   பல்வேறு பகுதிகளில்  இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.  ஸ்ரீ மூனீஸ்வரர் சுவாமிக்கு ருத்ர ஹோமம்  27 நட்ச த்திரங்களுக்காண  அபிஷேகம் 64 புண்ணிய தீர்த்த அபிஷேகம்,   தீபாராதனையுடன்   வெகுசிறப்பாக  நடந்தது. பின்னர்   ஸ்படிக -ருத்திராஷ மாலை அலங்காரம் நடைபெற்றது. 

ஸ்ரீ முனிஸ்வரர்   பக்தர்களுக்கு   ருத்திராஷ மாலையில் அருள்பாலித்தார். புதுக்கோட்டை ஆலங்குடி, வடகாடு, திருவரங்குளம்    ஆகிய சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைதந்து   சாமிதரிசனம் செய்தனர். பின்னர்  பக்தி பஜனை நடந்தது.   அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர்,     புதுகை ரவி  குருக்கள், பழனியப்பன்பூசாரி மற்றும் விழா கமிட்டியாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இவ்விழாவில்   பெங்களூர்  கோ.சுவாமிநாதன் , கோவிந்தராஜூ , தர்மராஜு,  மாரிமுத்து, சுரேஷ்  மணிகண்டகுருக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + = 10